Motivational Stories

Moral Stories

கணிப்பு - மற்றவரைப் பற்றிய நம்முடைய எண்ணம் | tamil moral stories | Moral stories in tamil | Short Stories in tamil

moral story in tamil

 ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள்களை வைத்திருந்தாள். 

 

அங்கு வந்த அவளின் தாய், நீ இரண்டு ஆப்பிள்கள் வைத்திருக்காய் அதில் ஓன்று எனக்குக் கொடு என்றாள்.

 

 தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி, ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள். பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள். தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது.

 

 தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள். உடனே அந்த சிறுமி, தாயிடம்  'அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு இதை நீ எடுத்துக்கோ' என்று சொன்னாள்.

 

நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் அனுபவம் எவ்வளவாகவும் இருக்கலாம். அறிவு விஸ்தீரணமாகவும் இருக்கலாம். ஆனால் ஒருவரைப்பற்றி  கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்  

 

tamil stories

 

No comments:

Post a Comment