இன்பம் என்பது எந்த வகையிலும் பிறருக்குச் செய்கின்ற தொண்டு மனப்பான்மையில் இருக்கிறது - காண்டேகர்
அன்பை பெருக்கினால் இன்பம், ஆனந்தம் தழைத்த்தோங்கும். இன்பத்தை ஒழுக்கத்தின் மீது தான் அமைக்க வேண்டும். அடிப்படையில் சத்தியம் பிறழாமல் இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் ஆதாரம் அன்பே - கோலரிட்ஜ்
இன்பத்தைப் பங்கு போட்டால் இரட்டிப்பாகும் - டென்மார்க்
இன்பத்தின் இறுதி எல்லை மெளனம் - தி.ஜானகிராமன்
இன்பமும் துன்பமும் விதியன்று; தானாகத் தேடி கொள்வது - சீனா
பரிசுத்தமான உள்ளத்துடன் ஒருவன் பேசினாலும், செயல் புரிந்தாலும் மகிழ்ச்சி நிழலைப் போல அவனைப் பின் தொடரும் - புத்தர்
பேராசை முடியுமிடத்தில் மகிழ்ச்சி தொடங்குகிறது - அங்கேரி
தியாகம் செய்யவும் மன்னிக்கவும், நன்றி கூறவும் தெரிந்து கொண்டு விட்டால், நாம் மகிழ்ச்சியைத் தேடி ஓடிஏ வேண்டியது இல்லை. அதுவே நம்மைத் தேடி ஒடி வரும் - ஜோசப் நியூட்டன்
பணமும் மகிழ்ச்சியும் நிரந்திர எதிரிகள். ஓன்று தங்குமிடத்தில் மற்றொன்று தங்குவதில்லை - சீனா
இன்பத்தை ஒழுக்கத்தின் மீது தான் அமைக்க முடியும். அடிப்படையில் சத்தியம் இருக்க வேண்டும் - கோல்ரிட்ஜ்
No comments:
Post a Comment