Motivational Stories

Moral Stories

வாய்ப்புகள் விலகும்போது கவலைப்படாதே | Motivational Stories in Tamil | Success Story in Tamil

 

opportunity

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான். தரையை துடைத்து காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டெர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள். 

 

'ஈமெயிலா? எனக்கு ஈமெயில் இன்டர்நெட் எல்லாம் தெரியாதே' என்றான் துடைக்க வந்தான்.

 

கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்பிகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா?

 

ச்சே!' என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

 

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கையில் 10 ரூபாய் இருந்தது. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக்  கூவி விற்றான்.

 

10 ரூபாய் லாபம் கிடைத்தது.  மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை.

 

 இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களுக்கு பின் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

 

இந்தச் சூழ்நிலையில் ஒரு வங்கிக் கணக்கு திறக்க சம்மந்தமான, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார்.

 

அவனுடைய ஈமெயில் முகவரி கேட்டார். வியாபாரி, 'ஈமெயில் முகவரி இல்லை' என்று பதிலளிக்க, 'ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா...? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இன்டர்நெட் எல்லாம்  தெரிந்திருந்தால்...?' என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர். 

 

அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டு இருப்பேன்' என்றார் வியாபாரி...!

 

வாய்ப்புகள் விலகும்போது கவலைப்படாதே.. எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகப் பெரிய வெற்றி உனக்காக காத்திருக்கும்....!
 

Success Quote


No comments:

Post a Comment