ஐந்தாம் சார்லஸ் மன்னர், அரச பதவியைத் துறந்து ஒரு கிறிஸ்துவ மடாலயத்தில் அமைதியாகக் காலம் கழித்து வந்தார். ஆனால் பொழுது போவதற்காக கடிகாரங்களை சேகரிப்பது, சுத்தம் செய்வது, அவைகளைச் செப்பனிடுவது ஆகியவற்றை செய்து வந்தார். ஒரு முறை இரண்டு சரியாக ஓடாத கடிகாரங்களை செப்பனிட்டு, இரண்டிலும் சரியான நேரத்தைக் காட்ட முயன்றார். ஆனால் இரண்டு கடிகாரங்களும் ஒரே மாதிரி நேரத்தைக் காட்டாது என்ற ஆங்கில பொன்மொழிக்கேற்ப அவை இரண்டும் தனக்கு இஷ்டப்பட்ட நேரங்களைக் காட்டின. உடனே அருகில் நின்ற உதவியாளரிடம், மன்னர் சொன்னார், 'என்ன மடமை! இரண்டு கடிகாரங்களைக் கூட ஒன்றாக ஓடச் செய்யமுடியாத நான், ஆட்சி செய்த காலத்தில் ஆயிரக் கணக்காணோரை ஒரே மாதிரி நினைக்கவும், செயல்படவும் வேண்டுமென்று எதிர்பார்த்தேன்!' என்றார்.
அவரவர் வழியில் அவர் அவர்கள் சிறப்பானவர்கள் நம் வழிக்கு கொண்டு வர நினைத்தால் நாம் தான் முட்டாளாவோம்.
No comments:
Post a Comment