பணம் பல நன்மைகளுக்குப் பயன்படுவது போல, பல தீமைகளுக்கும் காரணம் ஆகிறது - வசந்ததேசாய்
பணம் சம்பாதிப்பவன் பெரிய மனிதல்லன்; அதனைப் பாதுகாப்பவனே பாரிய மனிதன் - பின்லாந்து
எப்படிப்பட்ட முட்டாளும் பணத்தைச் சம்பாதித்து விடலாம். அதை ஒரு புத்திசாலி மட்டுமே காப்பாற்ற முடியும் - அமெரிக்கா
சின்னஞ்சிறு செலவுகள் பற்றிக் கவனமாக இருங்கள். சிறிய ஓட்டை கப்பலையே கவிழ்த்துவிடும் - பெஞ்சமின் பிராங்க்ளின்
ஈட்டி எட்டு முழம் பாயும், பணம் பாதாளம் மட்டும் பாயும் - தமிழ்நாடு
மனித குலத்திற்குத் தீராத நோய் ஓன்று பிடித்திருக்கிறது. மாறாத சாபம், இறங்காத நச்சு. அதன் பெயர் பணம் - பாரதியார்
பணக்காரனுக்குப் பின்னும் பத்துப்பேர்; பைத்தியக்காரனுக்குப் பின்னும் பத்துப் பேர் - இந்தியா
கடன் இல்லாதவனே பணக்காரன்; உடல் ஆரோக்கியம் உள்ளவனே செல்வந்தன் - யூகோஸ்லாவியா
பணம் பேச தொடங்கும்போது உண்மை ஊமையாகி விடும் - ரஷ்யா
பணம் பேசுகிறது; நாய்கள் குறைக்கின்றன - அங்கேரி
பண்பிற்குப் பெரும்பகை செல்வம் - இங்கிலாந்து
பணம் இல்லாதவன் பிணம் - தமிழ்நாடு
செல்வத்தை எல்லோரும் குறை கூறுகிறார்கள். ஆனால், அதை யாரும் வெறுப்பதில்லை - டென்மார்க்
பணக்கரானின் கைகள் நீளமானவை. ஆனால் அவை தேவலோகத்தை எட்டா - திபெத்
நாணயமே உண்மையான பெருமை - இங்கிலாந்து
பணம் சேர்க்கும் வழி நியாமாக இருத்தல் வேண்டும்
பணக்கரான் வீட்டில் சோறு வெந்து கொண்டே இருக்க வேண்டும் - ருமேனியா
No comments:
Post a Comment