"கற்றது கையளவு"
இன்றைய நவநாகரீக உலகில் நாம் தினமும் புது புது விஷயங்கள் கற்க வேண்டும். அது நமது தொழில் வளர்ச்சிக்காகவோ, கல்வி அறிவுக்காகவோ, தொழில் நுட்பங்களை கையாளவோ இருக்கலாம். எதுவாயினும், கற்றல் வேண்டும். அப்பொழுது தான் வாழ்வில் முன்னேற்றம் உண்டு.
நாம் அனைவரும் வெற்றி என்னும் கனியை நோக்கியே ஓடுகிறோம். அதில் சிலர் எண்ணி கொண்டு மட்டுமே இருக்கிறார்கள் மற்றும் சிலர் வழியிலே சோர்வடைகின்றனர் வெகு சிலர் மட்டுமே கனியை அடைந்து ருசிக்கிறார்கள். அக்கனியை அடைய நமக்கு மிகப் பெரிய உந்து சக்தியாகவும், வழியில் சோர்வடையும் பொழுது நம்பிக்கை ஊட்டும் நல்ல நண்பனாக, ஆசானாக இருப்பவை புத்தகங்கள்.
புத்தகங்கள் நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷங்கள். அவற்றை தினம் தோறும் வாசிப்பதன் மூலம் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன
- மூளையை பலப்படுத்துகிறது.
- மன அழுத்தத்தை குறைக்கிறது.
- ஆயுட்காலம் நீடிக்கிறது.
- பொது அறிவை மேம்படுத்துகிறது
- நினைவாற்றலை மேம்படுத்துகிறது
- நேர்மறை சிந்தனையை ஊக்குவிக்கும்
இது போல் எண்ணில் அடங்கா நன்மைகள் உண்டு. இத்தகைய புத்தகங்களைப் பற்றிய அறிஞர்களின் பொன்மொழிகள் இதோ,
"என் மனதுக்கு பிடித்த புத்தகங்களை மட்டும் என்னிடம் கொடுத்து என்னை வாழ்நாள் முழுவதும் சிறைப்படுத்தினாலும் நான் வருத்தப் பட மாட்டேன்" என்றார் அறிவுச் சுடர் மாஜினி..
"தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் அறிஞர்களின் கருவூலங்களே புத்தகங்கள்."
"காலமென்னும் ஆழ்கடலில் பயணம் செல்லும் நமக்கு கலங்கரை விளக்கமாக திகழ்பவை நல்ல புத்தகங்களே" - வீப்பில்
"புத்தகங்கள் இளமையில் வழிகாட்டி, பருவத்தில் பொழுது போக்குபவை, நாம் தனிமையில் இருக்கின்ற போது நமக்குப் பெருந்துணையாக இருப்பதுடன் நாமே நமக்கு ஒரு பெருசுமையாகத் தோன்றாதவாறு செய்கின்றன" - கோலியர்
ஒரு நல்ல நுலைப் போல் சிறந்த நண்பனும் நெருக்கமான உறவினனும் எனக்கு வேறு இல்லை" - அறிஞர் அண்ணா
"எந்த இல்லத்தில் நூலகம் இருக்கிறதோ, அந்த வீட்டில் ஆன்மா இருக்கிறது" - பிளேட்டோ
"நூலறிவு பெற்றவன் குளத்தை ஒப்பான், மெய்யறிவு உடையவன் சுனையை ஒப்பான்" - ஆப்ஜெர்
"புத்தகங்கள், காலம் என்னும் கரையில் நிறுத்த பெற்றுள்ள கலங்கரை விளக்கம்" - இ.பி. விப்பின்
"புத்தகங்கள் இல்லையென்றால் சரித்திரம் மெளனமாகிவிடும். இலக்கியம் ஊமையாகிப் போகும். புத்தகம் என்பது மனித குலமே அச்சு வடிவில் இருப்பது போல்" - பார்பரா சச்மன்
No comments:
Post a Comment