எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார்.
அடடா இந்தக் குருவிக்கு கேடு காலம் வந்து விட்டதே என்பதை உணர்ந்த கருட பகவான் உடனடியாக அந்தக் குருவியை தூக்கிக் கொண்டு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு மரப்பொந்தில் பாதுகாப்பாக வைத்தது.
அந்த பொந்தில் வசித்து வந்த ஒரு பாம்பு கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த குருவியை விழுங்கி விட்டது. குருவியைக் காப்பாற்ற நினைத்து அந்த குருவிக்கு எமனாகி விட்டோமே என்று வருந்தியது கருட பகவான்.
இதைக் கவனித்த எமதர்மராஜன், "நான் அந்தக் குருவியை உற்று நோக்க காரணம் அந்தக் குருவி சில நொடிகளில் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வசித்த ஒரு பாம்பின் வாயால் இறக்க நேரிடும் என எழுதப்பட்டிருந்தது. அது எப்படி நிகழப் போகிறது என்பதை யோசித்துக்கொண்டிருந்தேன். அதற்குள் விதிப்படியே அது நடந்து விட்டது" என்று கூறினார்
"வாழ்க்கையில் என்ன நடக்க வேண்டுமோ அது நிகழ்ந்தே தீரும். அதனால் அதுகுறித்துக் கவலை பட்டுக் கொண்டே இருக்காமல், வாழ்க்கையை வாழுங்கள்."
No comments:
Post a Comment