ஒரு வாலிபன் ஒருநாள் காட்டுப் பகுதிக்குச் சென்றான். அருவிகள், மலைகள் சூழ்ந்த அடர்ந்த காட்டுப்பகுதி அது.
தன் வாழ்க்கையில் ஏற்பட்ட அவமானம், துக்கம், தோல்வி என அனைத்தையும் சகித்துக் கொள்ள முடியாதவனாக தன் கால் போன போக்கில் நடந்தான்.
உச்சி மலை வந்ததும் தன் கோபத்தை வெளிக்காட்ட நினைத்த அவன், சத்தமாக கத்த தொடங்கினான்.
நான் உன்னை வெறுக்கிறேன் என்றான்.
சிறிது நேரத்தில் நான் உன்னை வெறுக்கிறேன் என பதில் குரல் கேட்டது.
ஆத்திரம் அடைந்த அவன் புத்தியை இழந்து மீண்டும் மீண்டும் கத்த கத்த தொடங்கினான். பதிலுக்கு அவன் கொடுத்த குரலே அவனுக்கு பதிலாக வந்தது.
பின் சோர்வடைந்தவனாக அமர்ந்து விட்டான்.
பின் நிதானமாக நான் உன்னை நேசிக்கிறேன் என்றான்.
நான் உன்னை நேசிக்கிறேன் என்று பதில் வந்தது.
அவனுக்கு அப்போது தான் உண்மை புரிந்தது.
ஞானம் பிறந்தவனாக மிக மகிழ்வோடு இன்பவனமாக வாழ்க்கைக்கு தன் வீடு தேடி வந்தான்.
நாமும் கூட இந்த வாலிபன் போல் தான் வாழ்க்கையில் பல நேரம் தடுமாறி நடக்கிறோம்.
உலகம் என்பது கண்ணாடி போன்றதே. நாம் எதை உலகிற்கு கொடுக்கிறோமே அது தான் நமக்கும் திரும்பக் கிடைக்கிறது.
"உழைப்பை விதைக்கிறவன் உணவை பெறுகிறான்" இதுதானே யதார்த்த உண்மை.
"அன்பை கொடுங்கள் - அன்பு பெருகும்.
உழைப்பை கொடுங்கள் - உயர்வு நிச்சயம்
உண்மையை கொடுங்கள் - நிறைவு உறுதி
நிறைவு நிறைந்த வாழ்விற்கு ஈடுயிணை எதுவுமில்லை "
இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றதே. நாம் எதை கொடுக்கிறோமே அதையே பெறுகிறோம், என்பதை உணர்ந்து போதுமென்ற மனநிறைவோடு நல்லதையே விதைப்போம்.
No comments:
Post a Comment