பீர்பாலின் அரசியர் குறித்து உரையாடிக் கொண்டு இருந்த அக்பர் தீடீரென்று எழுந்து வந்து மண் தரையில் ஒரு நீண்ட கோடு போட்டார். அமைச்சர்கள் அனைவரையும் கூப்பிட்டார் அரசர்.
அமைச்சர் பெருமக்களே, இதோ தரையில் ஒரு கோடு போட்டிருக்கிறேன். இந்தக் கோட்டை சிறியதாக்க வேண்டும். ஆனால் இந்தக் கோட்டை அழிக்கக் கூடாது. இது தான் நிபந்தனை என்றார் அரசர்.
அமைச்சர்கள் கோட்டை உற்றுப் பார்த்தார்கள். கோட்டை அழிக்காமல் எப்படி சிறியதாக்க முடியும் என்று குழம்பினார்கள்.
பீர்பால் எழுந்து வந்தார். அக்பர் கிழித்த கோட்டுக்குப் பக்கத்தில் அந்தக் கோட்டை விட பெரிய கோடு ஒன்றைக் கிழித்தார்.
அரசே உங்கள் நிபந்தனையின் படி நீங்கள் கிழித்தக் கோட்டை நான் அழிக்கவில்லை. நீங்கள் போட்டிருந்த கோடு சிறியதாகி விட்டது. உங்கள் கோட்டுக்கு பக்கத்தில் அதை விட பெரிய அளவில் ஒரு கோடு போட்ட படியால் நீங்கள் கிழித்த கோடு சிறியதாகி விட்டது என்றார் பீர்பால்.
அமைச்சர்கள் பீர்பாலின் திறமையை நினைத்து மலைத்துப் போனார்கள்.
அக்பர் பீர்பாலின் புத்தி சாதுர்யத்தைப் போற்றி புகழ்ந்தார்.
No comments:
Post a Comment