ஒரு சின்ன பையன். பாக்கிறவங்கள் எல்லாம் அவனை ஒரு 'மண்டு' ன்னு தான் சொல்லுவாங்க.
அப்படித்தான் அவனும் இருந்தான்.
அதுமட்டுமில்லை அவன் மிகவும் வெட்கப்படுவான்! மற்ற பையன்களோட சேர்ந்து விளையாடறதுக்கே அவனுக்கு ரொம்ப வெட்கம்!
அதனாலே அவன் வீட்டில் உள்ள கோழிக்குஞ்சுகளுடன் தான் விளையாடுவான்.
அவன் ஒருநாள் பேருந்திலேயே பயணம் செய்தான்.
கண்டக்டர் டிக்கெட்டும் மீதி பணமும் கொடுத்தார்.
வாங்கி எண்ணி பார்த்தான். பணம் குறைவது போல் அவனுக்கு இருந்தது.
உடனே கண்டக்டர்கிட்டேயே என்ன சார் பணம் குறைச்சலா இருக்கே என்றான். கண்டக்டர் பணத்தை வாங்கி மறுபடியும் எண்ணி பார்த்தார் அது சரியாகவே இருந்தது.
கண்டக்டருக்கு எரிச்சல்!
"என்னப்பா இது சரியாத்தானே இருக்கு.... உனக்கு கணக்கு தெரியாத என்ன? உன்னோட பெரிய தொல்லையா போச்சு என்று அலுத்துக்கிட்டார்.
சில்லறைக் காசை சரியாகக் கூட்டி பார்க்கத் தெரியாத அந்த சின்ன பையன் பேரு என்ன தெரியுமா? ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
ஆமாம் அந்தப் பையன்தான் வளர்ந்து கணித மேதையானது! பிற்காலத்திலே அவருபோட்ட கணக்கை உலகமே புரிந்து கொள்வதற்கு ரொம்ப கஷ்டப்பட்டது.
No comments:
Post a Comment