ஒரு ஊரை ஒட்டிய பகுதியில் கழுதையும் நரியும் நண்பர்களாய் இருந்தன.
கழுதைஅங்குள்ள வயலில் திருட்டுத்தனமாக மேயும். நரி வரப்பு ஒட்டிய சிறுவலைகளிலுள்ள நண்டுகளைப் பிடித்துத் தின்னும்.
ஒரு நாளிரவு அன்று பௌர்ணமி முழுநிலவு ஒளிமயமாக பிரகாசித்துக் கொண்டிருந்தது.
"ஆஹா என்ன நிலவு என்ன வெளிச்சம்! எனக்குப் பாட வேண்டும் போலிருக்கிறது" என்றது கழுதை.
"அய்யய்யோ! அது ஆபத்து. உன் குரல் காவல்காரனைக் கூப்பிட்டுவிடும்" என்று தடுத்தது நரி.
"உனக்கு தெரியாது என் குரலின் இனிமை; கேலி செய்கிறாய். இதோ பார்" என்ற கழுதை எடுப்பான குரலில் சிறப்பாகப் பாடுவது போல் உரக்கக் கத்தியது.
அடுத்த ஐந்தாவது நிமிடம்; அந்தந்த வயதுக்குக் காவலிருந்தவர்கள் எல்லாம் கம்பு தடியுடன் ஓடிவந்தனர். கழுதையின் காலை உடைத்ததோடு இடுப்பு எலும்பையும் நொறுக்கப் புடைத்தனர்.
அவர்கள் அப்பால் சென்றதும் இப்பால் வந்த நரி கழுதையிடம் "என்ன மாமா! பாட்டுக்குப் பரிசு பலமா?" என்று கேட்டது.
கழுதையால் பதில் சொல்ல முடியவில்லை; வலியால் முனகத்தான் முடிந்தது.
No comments:
Post a Comment