Motivational Stories

Moral Stories

எதை செய்தாலும் குற்றம் | Mulla Stories in Tamil | Mulla Kathaigal in Tamil

mulla stories in tamil | Tamil Moral Stories
 

உலகத்தை புரிந்து கொள்வது எப்படி? என்று மகன் கேட்டான்.

 

 'கழுதையிடம் இருந்து கற்றுக் கொள்.' முல்லா நஸ்ருதின் சட்டென பதில் உரைத்தார். அதெப்படி? 'ஒரு கழுதையை தாயார் செய்து கொள். நாளை என்னோடு பயணம் செய்ய தயாராகிக் கொள்..' 

 

கழுதையை முன்னால் நடக்க விட்டு முல்லாவும் அவர் மகனும் பின்னால் தொடர்ந்தனர். வழியில் மக்கள் இதை பார்த்து சிரித்தனர். மகன் கேட்டான், ஏன் இப்படி சிரிக்கிறீர்கள்! 'எந்த மடையர்களாவது கழுதையை நடக்க விட்டு, அதன் பின்னால் செல்வார்களா.. கழுதை ஒரு வாகனம் ' முல்லா, தன் மகனை கழுதையில் அமர்ந்து சவாரி செய்ய அனுமதித்தார். 

 

சிறிது தூரத்தில் ஒரு சிற்றூர் குறுக்கிட்டது. மக்கள் கூட்டம் தென்பட்டது. அதில் ஒருவன் கழுதையை தடுத்து நிறுத்தினான். ஏன் தடுக்கிறாய்... மகன் கேட்டான். 'என்ன அநியாயம் இது. நீ சிறுவன். உன் தந்தை வயதானவர். அவர் தான் கழுதை மேல் அமர்ந்து பிரயாணம் மேற்கொள்ள வேண்டும்.' முல்லா கழுதையில் அமர்ந்தார். சிறுவன் அவர் பின்னால் நடந்தான். 

 

வழியில் வேறு ஒரு ஊர் குறுக்கிட்டது. முல்லாவை பார்த்து அங்கு நின்ற ஒரு மனிதன் சாடினான். என்ன விஷயம், ஏன் கோபமாக இருக்கிறீர்கள். மகன் வினவினான். என்ன கொடுமை இது. நீ சிறுவன் உன்னை நடக்க சொல்லி விட்டு, அந்த பெரிய மனிதன் என்ன சொகுசாக கழுதை மேல் அமர்ந்து செல்கிறான். நீயும் ஏறிக் கொள். இதில் ஒன்றும் தவறு இல்லை. முல்லாவும் மகனும் கழுதை மேல் அமர்ந்து தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். 

 

வழியில், ஒரு சந்தை குறுக்கிட்டது. கழுதை மேல் இருவர் அமர்ந்து செல்வதை கண்ட மக்கள் கூப்பாடு போட்டனர்.

 

கழுதை சற்று மிரண்டு பின் நின்றது. 'என்ன அநியாயம் இது. இந்த கழுதை மேல் இருவர் அமர்ந்தால் கழுதை என்னவாகும்.' மக்களின் குரலுக்கு செவி சாய்த்த முல்லாவும், மகனும் கழுதையை தங்கள் தோளில் சுமந்தபடி நடந்து சென்றனர். 

 

வழியில், ஒரு ஆற்றை கடக்க குறுகிய பாலம் வழியே நடந்தனர். இதை கண்ட மக்கள் வாய் விட்டு சிரித்தனர். 'என்ன கோமாளித்தனம் இது. எந்த பைத்தியக்காரனாவது, கழுதையை தோளில் சுமந்து செல்வானா? 

 

மக்களின் வெடிச் சிரிப்பில் கழுதை மிரண்டது. ஆற்றில் விழுந்தது. துடி துடித்தது, பின் மூழ்கியது; கண்ணில் இருந்து மறைந்தது.

 

முல்லா சொன்னார். "இது தான் நீ வாழும் உலகம்." எதை செய்தாலும் குற்றம்.


No comments:

Post a Comment