Motivational Stories

Moral Stories

அமைதி | Moral Stories in tamil | Tamil best stories for reading

tamil moral stories for kids | Motivational stories

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அழிப்பது அந்த மன்னனின் வழக்கம்.

 

ஒரு முறை 'அமைதி ன்னா என்ன? என்பதை தத்ரூபமாக ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று மன்னன் அறிவித்தார்.

 

இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள்.

 

மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டு வந்தார். 

 

ஒருவன் அழகான ஏரியை ஒரு அழகிய மலையின் அடி வாரத்தில் இருக்கிற மாதிரி வரைந்திருந்தார். மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது.

 

மற்றொருவர் பார்த்தவுடன் பறிக்கத் தூண்டும் வகையில் மலர்களை தத்ரூபமாக வரைந்திருந்தார். இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றினபடி ஓவியத்தில் பிரதிபலித்திருந்தார்கள்.

 

ஆனா ஒரே ஒரு ஓவியத்தில் மட்டும் ஒரு மலை மேலிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்விழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டும் அல்ல இடியோட மழை வேற கொட்டிக் கொண்டு இருந்தது. இது அமைதியே அல்ல. சற்று உற்று பார்த்தப்ப நீர் வீழ்ச்சியின் கீழிருந்த மரம் ஒன்றில் கூடு கட்டி இருந்த பறவை ஓன்று தன் குஞ்சுகளோட காணப்பட்டது. 

 

 இந்த ஓவியத்தை வரைந்தது யார்? என்றார் மன்னர். 

 

சம்பந்தப்பட்ட ஓவியர் எதிரே நிறுத்தப்பட்டார். மன்னர் இந்த ஓவியம் தத்ரூபமாக பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

 

ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை, மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை. ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது? என்றார். 

 

அதுக்கு ஓவியர் "மன்னா சப்தமும் பிரச்சனையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல. இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்க விடாமல் பார்த்துக் கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி. 

 

அப்படி பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் போது இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது. அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம் என்று கை தட்டின மன்னன் அந்த ஓவியத்திற்க்கே முதல் பரிசு கொடுத்தார்.


No comments:

Post a Comment