கவலை இல்லாமல் இருந்தால் உடம்பும் நல்லா இருக்கும். மனசும் நல்லா இருக்கும். ஒரு பெரிய பணக்காரர் 4 கார் வச்சிருக்கார் அவருக்கு கோபமே வர்றதில்லை.
எப்படி சார் இது? ன்னு அவர் நண்பர் கேட்டார்.
எனக்கு இந்த விசயத்தில் குரு ஒரு பிச்சைக்காரன் தான் என்றார்.
எப்படின்னு கேட்டார்.
அதுக்கு அவர் சொன்னார்! ஒரு நாள் எங்க வீட்டுக்கு ஒரு பிச்சைக்காரன் வந்து சோறு கேட்டான்.
நான் ஏதோ கோபத்திலே இருந்தேன்!
காலை நேரத்துலே வந்து தொந்தரவு பண்ணாதே போன்னு சத்தம் போட்டேன்...
அதுக்கு அந்த பிச்சைக்காரன் சொன்னான். சார் இல்லேன்னா இல்லைன்னு சொல்லுங்க! அதுக்காக இப்படி எல்லாம் கோபப்படாதீங்க... அது உங்களுக்கு நல்லதில்லைன்னு சொன்னான்.
எனக்கு இன்னமும் கோபம் அதிகமா வந்தது. பிச்சைக்காரன் நீ எனக்கு அறிவுரை சொல்லுறியா அப்படின்னு கத்தினேன்.
அதுக்கு அவன் சொன்னான். கத்தாதீங்க சார்... நானும் உங்களைவிட வசதியா இருந்தவன்தான். 8 கார் வச்சியிருந்தவன். ஆனா உங்களைவிட அதிகமா கோபப்பட்டேன்.... அதனால தான் இன்னைக்கு இப்படி ஆயிட்டேன்!
அன்னையிலேருந்து அவரு கோபப்படறதில்லையாம்! அதனாலே நாலு காரோடயே நல்லபடியாய் இருக்காரு!
கோபப்படாம இருக்கணும்னா பொறுமையும் சகிப்புத்தன்மையும் ரொம்ப அவசியம்.
No comments:
Post a Comment