Motivational Stories

Moral Stories

அப்பா | Moral Stories in tamil | Motivational Stories in Tamil

 
tamil motivational stories|moral stories | story about father


 12 ஆண்டுகளுக்கு முன்னால் இன்ஜினியரிங் முடித்து விட்டு பணிக்காக சென்னைக்கு வந்தேன். எனக்கு வேலை கிடைத்த புதிதில் நான் வாங்கிய முதல் மாதச் சம்பளம் 8000 ரூபாய். அதுவும் அந்த மாதத்தின் 7 ஆம் தேதி தான் போடப்படும்.

 

அப்படி முதல் மாதச் சம்பளம் வங்கியில் போடப்பட்டதும், தலைகால் புரியவில்லை. வீட்டிற்கு போன் செய்தேன். அப்பா தான் முதலில் எடுத்தார். அவரிடம் நான் அதிகமாக பேசுவதில்லை.

 

மெல்லியதாக நலம் விசாரித்து விட்டு "உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?" என்றேன். அப்பா பதில் சொல்லவில்லை. அம்மாட்ட பேசு... என்றவாறே போனை அம்மாவிடம் தந்து விட்டார்.

 

 நானும் அம்மாவிடம், பாத்தீங்களா நான் ஏதாவது வேண்டுமான்னு அப்பாட கேட்டேன், ஆனா அப்பா பதிலே சொல்லல இவரெல்லாம் ... என்று தொடங்கி அப்பாவை சிறிது வசை பாடிவிட்டு, மற்ற கதைகளை அம்மாவிடம் சொன்னேன். 

 

அம்மா அந்த கதைகளை எத்தனை முறை கேட்டாலும் முதல் முறை கேட்பது போல் கேட்டு கொண்டார்.அம்மாவிடம் பேசிவிட்டு போனை வைத்து விட்டேன்.

 

ஓரிரு நாட்கள் கழித்து  என் வங்கிக் கணக்கை எதார்த்தமாக பார்த்தேன். அந்த கணக்கு நான் கல்லூரி காலத்தில் இருந்தே பயன்படுத்துவது. என் அப்பா என்னுடைய செலவுக்காக என்று அதில் தான் பணத்தை போடுவார். 

 

பணியில் சேர்ந்த தகவலும், சம்பள விவகாரங்களும் அப்பாவுக்கு தெரியும். அதனால் இனி பணம் மாதச் செலவுக்காக பணம் போட மாட்டார் என நினைத்திருந்தேன். அதோடு இனி அப்பா காசு நமக்கு எதுக்கு என்ற ஆணவமும் என் தலையில் ஏறிக் கொண்டதால் அந்த வங்கிக் கணக்கைப் பார்க்கவில்லை.

 

முதல் மாதச் சம்பளம் வாங்கி அது தீரும் நிலை வந்து பழைய கணக்கில் ஏதாவது இருக்கிறதா என்று கணக்கைப் பார்த்தால் அதில் வழக்கம் போல அந்த மாதமும் 30 ஆம் தேதியே 5000 ரூபாய் போட்டிருந்தார். அதற்கடுத்த மாதங்களிலும் இதுவே தொடர்ந்தது.

 

அது மட்டுமின்றி அந்த வருடமும் வழக்கம்  போலவே தீபாவளிக்கும், பொங்கலுக்கும் என் பிறந்த நாளுக்கும் நான் வீட்டிற்கு வரும் முன்னமே துணிமணிகள் எடுத்து வைக்கப்பட்டிருந்தது.

 

கையில் கொஞ்சம் காசு வந்தவுடன் நான் தான் மாறியிருந்தேன்.

 

அப்பா மாறவேயில்லை.

 

ஒரு கட்டடத்தின் வெளித் தோற்றம் அம்மா பார்க்க அழகாக இருப்பார். வீடும் அப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் அந்த வீட்டின் அஸ்திவாரம் அப்பா அதன் பலன் வெளியே தெரியாது. ஆனால் உறுதியாக இருக்கும். நான் போகும் பாதை எல்லாம் என் அப்பா போட்டு வைத்தது. எனை சேரும் செல்வம் எல்லாம் அவர் பார்த்து விதைத்தது.

No comments:

Post a Comment