Motivational Stories

Moral Stories

மான்| Moral Stories in Tamil | Motivational Stories in Tamil

deer story | moral story tamil

 
ஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஒரு தருணம். 

 

அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது. அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ஆறு. இதுவே கன்றை ஈணுவதற்குச் சரியான இடம் என்று அந்த மான் அங்கு சென்றது. 

 

அப்போது, கருமேகங்கள் சூழ்ந்தன. மின்னலும் இடியும் வானில் இடிக்க ஆரம்பித்தன. 

 

மான் தன் இடப்பக்கம் பார்த்தது. அங்கே "ஒரு வேடன் தன் அம்பை, மானை நோக்கிப் குறி பார்த்து நின்று கொண்டிருந்தான்."

 

 மானின் வலப்பக்கம் "பசியுடன் ஒரு புலி அதை நோக்கி வந்து கொண்டிருந்தது. 

 

ஒரு கருவுற்ற மான். பாவம் என்ன செய்யும்?

 

அதற்கு வலியும் வந்து விட்டது.

 

 மேலும் எங்கோ "பற்றிய காட்டுத் தீயும் எரிந்து நெருங்கி வர ஆரம்பித்து விட்டது.

 

என்ன நடக்கும்? மான் பிழைக்குமா?

 

மகவை ஈணுமா?

 

மகவும் பிழைக்குமா?

 

இல்லை, காட்டு தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா?

 

வேடனின் அம்புக்கு மான் இரையாகுமா?

 

புலியின் பசிக்கு உணவாகுமா?

 

பற்றி எரியும் கொடும் தீ ஒரு புறமும் பொங்கும்காட்டறு மறு புறம்.

பசியோடு புலியும்.. வில்லுடன் வேடனும் எதிர் எதிர் புறம்.

 

மான் என்ன செய்யும்?

 

மான் எதை பற்றியும் கவலைபடாமல்  தன் கவனம் முழுவதையும் தன் மகவை ஈனுவத்திலேயே செலுத்தியது. 

 

ஒரு உயிரை விதைப்பதிலேயே தன் கவனம் இருக்க, மற்ற சூழல்கள் அதன் கண்களில் படவில்லை.

 

அப்போது நடந்த நிகழ்வுகள்.

 

மின்னல் தாக்கியதால் வேடன் கண் இழந்தான். அவன் எய்த அம்பு, குறி தவறி புலியைத் தாக்கியது.

 

தீவிர மழை காட்டுத்  தீயை அணைத்தது.

 

அந்த மான் அழகான ஒரு குட்டி மானைப் பெற்று எடுக்கிறது.

 

வாழ்வின் பெரும் புயலில் பல எதிர்மறை சிந்தனைகள் நம்மைச் சுற்றி நின்று அச்சுறுத்தும்.

 

நாம் நம் காரியத்தில் மட்டும் கவனம் செலுத்தி மற்றதை இறைவனிடம் விட்டுவிட வேண்டும்.

 

அவர் எப்போதும் எதிலும் நம்மை வருத்தப்பட விடமாட்டார்.

 

கடவுள் தூங்குவதும் இல்லை.

 

நம்மை துயரப்படுத்துவதும் இல்லை.

 

உன் செயலில் நீ கவனம் செலுத்து. மற்றவை நடந்தே தீரும்.

No comments:

Post a Comment