Motivational Stories

Moral Stories

ஒளவையாரின் சமயோசிதம் | Moral Stories in Tamil | Tamil Kadhaigal | Tamil Neethi kadhaigal

Tamil Neethi kadhaigal


 ஒரு முறை சோழ நாட்டிலே சோழ மன்னன் தம் புலவர்களை எல்லாம் அழைத்து மறுநாள் பொழுது விடிவதற்குள் "நாலு கோடிப்பாடல்" பாடிவர வேண்டும் என்று கட்டளையிட்டார்.

 

ஒரு நாளில் நாலு பாடல் என்பதே பெரிய வேலை. அதுவும் புலமையுடன் எழுத வேண்டும். நாற்பது பாடல் என்றாலும் பரவாயில்லை. ஒரேயடியாக நாலுகோடிப் பாடல்கள் வேண்டுமானால் நாங்கள் எப்படி எழுதுவோம் என்று புலம்பத் துவங்கி விட்டார்கள் புலவர்கள்.எப்படிப் படுவது என அஞ்சினார்கள். 

 

ஒளவையார் அப்போது அவ்வழியே வந்தார். புலவர்களின் தர்ம சங்கடத்தை கேட்ட ஓளவையார்  "இவ்வளவு தானா?" என்று சொல்லி சிறப்பான பண்புகளைக் குறிக்குமாறு நான்கு பாடல்களை ஒவ்வொன்றும் ஒரு கோடிக்குச் சமானம்  எனப் பொருள்படும்படியாகப் பாடி அந்த நான்கு பாடல்களையும் புலவர்களிடம் தந்தார். 

 

மறுநாள் புலவர்கள் அந்தப் பாட்டை மன்னரிடம் பாடிக் காட்டினார்கள். மன்னனுக்கோ மிகவும் ஆச்சிரியம். இத்தனைச் சிறப்பு வாய்ந்த  பாடலை இவ்வளவு சமயோசிதமாகப் பாட ஒளவையாராலேயே முடியும் என்று கூற புலவர்களும் ஒத்துக்கொண்டார்கள். 


மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று மிதியாமை "கோடி" பெரும். 


நல்ல பண்புகளை மதித்து நடக்காதவரின் வீட்டின் முன்பகுதியைக் கூட மிதிக்காமல் இருப்பது, செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.


உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தன்மனையில் உண்ணாமை "கோடி" பெரும்.


உண்ணுமாறு விரும்பிக் கேட்டுக் கொள்ளாதவரின் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

 

"கோடி" கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெரும்.


கோடி பொன்னைக் கொடுத்தாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.


கோடானு "கோடி" கொடுப்பினும் கோடாமை கோடி பெரும்.


பலகோடி பொன் கிடைப்பதாக இருந்தாலும் சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

No comments:

Post a Comment