Motivational Stories

Moral Stories

Tenali Raman Stories in Tamil | தெனாலிராமன் கதைகள் | அபசகுனம்

Tenali raman stories

 
ஒருநாள் அரண்மனையில் கிருஷ்ண தேவராயர் ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தார் ,காலை விடிந்ததும் எழுந்த அவருக்கு எதிரில் ஒரு சேவகன் நின்று கொண்டு இருந்தான் ,அவனை பார்த்ததும் ஏதோ தோன்றியது அரசருக்கு இருந்தாலும் ஒன்றும் சொல்லாமல் தனது வேலையை தொடர்ந்து செய்ய தொடங்கினார் அரசர். 


அன்று நடக்கவிருந்த செயல்கள் எல்லாமே தள்ளிப்போனது ,இது அந்த சேவகனின் முகத்தில் முழித்ததினால் ஏற்பட்ட அபசகுனம் என்று நினைத்தார் அரசர் ,

யோசித்துக்கொண்டே நடந்து வந்த அரசரின் கால் அருகில் இருந்த நாற்காலியில் மோதி சிறிது இரத்தம் வந்தது ,உடனே கோபமுற்ற அரசர் அந்த சேவகனை தூக்கிலிடுமாறு கோபமாக கூற

அருகில் இருந்த சேவகர்கள் அவனை இழுத்து செல்ல முற்பட்டனர் ,இதனை பார்த்த தெனாலிராமன் சிரித்தார் ,

ஏன் சிரிக்கிறாய் தெனாலிராமா என்று கேட்டார் அரசர் ,இல்லை அவன் முகத்தில் விழித்த உங்களுக்கு சிறு கால் வழிதான் ஏற்பட்டது ,இப்போது உங்கள் முகத்தில் விழித்த அவனுக்கு உயிரே போக போகிறது ,தற்போது யார் அபசகுனம் பிடித்தவர் என்று கேட்டார்.


கோபத்தில் முட்டாள் தனமாக நடந்து கொண்டதை உணர்ந்த அரசர் தன்னை திருத்திய தெனாலிராமனுக்கு நன்றியும் ,அந்த சேவகனுக்கு பரிசும் கொடுத்து அனுப்பினார் .


No comments:

Post a Comment