அக்பரின் அரண்மனையில் வேலை செய்து கொண்டிருந்த காவலாளி, தான் செய்த தவறுக்காக அக்பரின் முன்னால் நிறுத்தப்பட்டார். மிகவும் கோபப்பட்ட அக்பர் காவலாளிக்கு மரண தண்டனை வழங்குமாறு உத்தரவிட்டார்.
அமைச்சர்களே மன்னர் அளித்த தண்டனையைக் கேட்டதும் அதிர்ந்து போனார்கள்.
"காவலாளி செய்த சிறு தவறுக்கு மரண தண்டனையா?" என்று வேதனைப்பட்டார்கள். அமைச்சர்கள் அனைவரும் பீர்பாலைப் பார்த்தார்கள்.
பீர்பாலால் தான் இந்த தண்டனையை ரத்து செய்வதற்கு அரசருடன் பேசமுடியும் என்பது அவர்களின் எண்ணம்.
அரசே அருள் கூர்ந்து நான் சொல்வதை தாங்கள் கேட்க வேண்டும் என்றார். கோபத்தின் உச்சக் கட்டத்தில் இருந்த அக்பர், "நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம். நான் கேட்கத் தயாராக இல்லை! நீங்கள் என்ன சொல்வீர்கள் என்பது எனக்குத் தெரியாதா! என்னிடம் நீங்கள் என்ன கேட்டாலும் அதற்கு எதிராகத்தான் நான் முடிவு எடுப்பேன்! என்றார் அக்பர் கோபத்துடன்.
அரசே இந்த காவலாளிக்கு உடனே மரண தண்டனையை நிறைவேற்றுங்கள்! என்று தான் கூற வந்தேன்! என்றார் பீர்பால்.
திகைப்பில் ஆழ்ந்த அக்பர் பீர்பாலின் சாதுர்யமான பேச்சாற்றலை எண்ணி மகிழ்ந்து பாராட்டியதோடு காவலாளியை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment